Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Sunday, 13 April 2025
webdunia
மிதுனம்-பண்பியல் தொகுப்பு
மற்றவர்களை எளிதாக கவரக்கூடியவர்கள். நிலைத்தன்மை கொண்டவர்கள். தாங்கள் கொண்ட கொள்கையை எந்நேரத்திலும் விடமாட்டார்கள். புத்திக்கூர்மை மிக்கவர்கள். விரோதிகளைக் கண்டாலும் புன்னகைக்கும் பரந்த மனம் கொண்டவர். எல்லோரையும் அனுசரித்துப் போவது இவரது விசேஷ குணமாகும். இவர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவர். தயாள குணம், கருணைவாதி, மனித நேயம் கொண்டவர். எல்லோரையும் சமமாக மதிப்பார். சகித்துக் கொள்ளுவர். துரோகிகளையும், பொய்யர்களையும் மன்னிக்க மாட்டார். உணவு உண்ணுவதில் அதிக ஆர்வம் காட்டுவார். உண்மை மற்றும் நேர்மைக்கு முக்கியத்துவம் கொடுப்பார். எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுபவர். விரோதிகளையும் திறன் அறிந்து பாராட்டுவார். ஒரு வார்த்தை பேச வேண்டுமென்றாலும் யோசித்துத்தான் பேசுவார். எந்த கஷ்டத்தையும் தனியாக நின்று சமாளிப்பார்.।

ರಾಶಿ ಫಲ