
மிதுனம்-குணம்
மிதுன ராசிக்காரர்களுக்கு எண்ணற்ற குண நலன்கள் உண்டு. விவேகமானவர், சமயம் அறிந்து நடந்து கொள்பவர், மிகுந்த அனுபவசாலியாகவும் இருப்பார். மன அமைதிக்காக கோயில், தர்ம காரியங்கள் செய்வார். ஒவ்வொரு நாளையும் கடவுள் கொடுத்த பாக்கியமாக கருதி வாழ்பவர். தன்னம்பிக்கை கொண்டவர், மனம் மற்றும் ஆத்ம திருப்திக்காக வாழ்பவர், அன்பிற்கு கட்டுப்படுவராக மிதுன ராசிக்காரர்கள் இருப்பார்கள். தான் அன்பு செலுத்தியவருக்காக எதையும் செய்பவர். மற்றவர்களுடன் ஏற்படும் விரோதத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டு வந்து விடுவார். வெட்டு ஒன்ணு துண்டு ரெண்டு என்ற பழமொழிக்கு ஏற்ப மற்றவர்களிடம் பேசுவார். எதையும் முகத்திற்கு நேராகவே சொல்லிவிடுவார். பிடித்தவர்களின் ஆலோசனையை மட்டுமே எடுத்துக் கொள்வார்.