கடகம்-பண்பியல் தொகுப்பு
கடக ராசிக்காரர்கள் அடிக்கடி தனது எண்ணத்தை மாற்றிக் கொள்வார்கள். இவர்களது எண்ணம் நீரோட்டத்தைப் போன்றது. சந்திரன் இவர்களது கிரகமாகும். மற்றவர்களின் மனநிலைக்கு ஏற்ப செயல்படும் ஆற்றல் மிக்கவர்கள். சில சமயங்களில் கெட்ட சிந்தனைகள் கொண்டவர்கள். எனினும் பழகுவதுற்கு எளியவர். சுயநலத்துடன் நடந்து கொண்டாலும் மற்றவர்களின் துயரத்தில் பங்கேற்பர். கடக ராசிக்காரர்கள் மூர்கத்தனமாக இருக்க மாட்டார்கள். ஆனால் அவ்வாறு காட்டிக் கொள்வர். தனது உடமைகளை பிறர் பயன்படுத்த அனுமதிக்க மாட்டார்கள். விஞ்ஞானத்தில் இவர்களுக்கு தனி ஆர்வம் இருக்கும். இவர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாகவும், அழுபவர்களாகவும் இருப்பர்.