மிதுன ராசிக்காரர்கள் பார்ப்பதற்கு ஆரோக்கியமானவர்களாகவும், தடிமானாகவும் காணப்படுவர். மன உளைச்சல் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இதனாலேயே உடல்நிலை பாதிக்கப்படும். ஏதேனும் பெரிய வியாதி வருமோ என்ற பயம் இருக்கும். நெஞ்சு வலி, இதய நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இரவு உணவை குறைத்துக் கொள்வது நல்லது. துளசி, மிளகு போன்ற மருத்துவ குணம் கொண்டவைகளை பயன்படுத்துதல் நல்லது. கீழே விழுந்து அடி படும் வாய்ப்புண்டு