தனது குடும்பத்திற்காக அதிகம் உழைப்பவர்கள் மகர ராசிக்காரர்கள். ஏராளமான கஷ்டங்களையும் அனுபவிப்பர். ஆனால் தங்களது எந்த கஷ்டத்தையும் குடும்பத்தினரிடம் சொல்லாமல், அவர்களுடன் இனிமையாக பழகுவர். தர்மம், சமுதாய சேவைகளில் அதிக நாட்டம் இருக்கும். குடும்பத்தினர் அனைவரும் இவர் பின்னே செல்வர். கருணை மற்றும் தயாள குணம் கொண்டவர்.